TNPSC Thervupettagam

LEAPS 2025 முன்னெடுப்பு

October 18 , 2025 15 hrs 0 min 16 0
  • புது டெல்லியில் நடைபெற்ற PM GatiShakti திட்டத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆனது LEAPS 2025 முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
  • LEAPS (தளவாடங்களின் சிறந்து விளங்குதல், மேம்பாடு மற்றும் செயல்திறன் காப்பு) என்பது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) தலைமையிலானது.
  • இந்த முன்னெடுப்பானது தளவாடச் செயல்திறனை தரப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் NLP (தேசிய தளவாடக் கொள்கை) மற்றும் PM GatiShakti திட்டத்துடன் ஒருங்கிணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • LEAPS 2025 முன்னெடுப்பானது சரக்கு சேவைகள், கிடங்கு, MSME (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள்), புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட 13 விருதுப் பிரிவுகளை உள்ளடக்கியது.
  • இது பசுமை தளவாடங்கள், ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை) நடைமுறைகள் மற்றும் அரசு, தொழில்துறை மற்றும் கல்வித் துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்