ஆஸ்திரியாவின் அறிவியலாளர்கள், ஒளி நுண்ணோக்கி அடிப்படையிலான நியூரான் இணைப்பு குறித்த ஆய்வுக் கருவி (LICONN) என்ற புதிய நுண்ணோக்கி முறையினை உருவாக்கியுள்ளனர்.
நியூரான்களுக்கு இடையிலான அனைத்து நரம்பிணைப்புகளுடன் இது மூளையின் திசுக்களைப் படமாக மறுகட்டமைக்கும் திறன் கொண்டது.
இது சாதாரண ஒளி சார் நுண்ணோக்கிகள் கண்டறியக் கூடியதை விட சிறியதாக உள்ள மூளையில் உள்ள கட்டமைப்புகளை காண்பதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு வழி வகுக்கிறது.