ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது “Live Wire” (லைவ் வயர்) எனப்படும் தனது மின்சார வாகனத் தயாரிப்பினைத் தொடங்கியுள்ளது.
இது வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனச் சந்தையின் போட்டித் தன்மைக்கு ஈடு கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய முயற்சியாகும்.
அடுத்த இளைய தலைமுறை மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த மின்சார வாகன இலக்குப் பிரிவு செயல்படும்.