TNPSC Thervupettagam

LPG குழாய் இணைப்பு வலையமைப்பு விரிவாக்கம்

August 27 , 2026 16 hrs 0 min 2 0
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) சுமார் ₹7,000 கோடி மதிப்பீட்டிலான சுமார் 1,800 கி.மீ LPG குழாய் இணைப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இக்குழாய் இணைப்புகள் தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கும்.
  • அரசுக்கு சொந்தமான கெயில் (GAIL) இந்தியா நிறுவனம் இத்திட்டங்களை உருவாக்கும்.
  • இத்திட்டங்களில் செர்லப்பள்ளி-நாக்பூர் (556 கிமீ), ஜான்சி-சிதர்கஞ்ச் (611 கிமீ), மற்றும் சிக்ராபூர்-கோவா & ஹூப்ளி (633 கிமீ) குழாய் இணைப்புகள் அடங்கும்.
  • இத்திட்டங்கள் இந்தியாவின் LPG குழாய் இணைப்பு வலையமைப்பை சுமார் 7,700 கி.மீட்டரிலிருந்து 9,500 கி.மீட்டராக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது சுமார் 24% வளர்ச்சியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்