TNPSC Thervupettagam

LVM3 தொழில்நுட்பப் பரிமாற்றம்

June 17 , 2026 14 hrs 0 min 26 0
  • மார்க்-3 ஏவு வாகன (LVM3) தொழில்நுட்பத்தை தனியார் இந்திய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான விருப்பக் கோரல்களை (EoI) இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) வரவேற்றுள்ளது.
  • பாகுபலி என்றும் அழைக்கப்படும் LVM3, இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட மற்றும் மிகவும் சக்திவாய்ந்த செயல்பாட்டு ஏவு வாகனமாகும், மேலும் இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட மூன்று-கட்ட ஏவுகலமாகும்.
  • சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகியவற்றை விண்ணில் செலுத்த LVM3 பயன்படுத்தப் பட்டது மற்றும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் OneWeb-இன் 72 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் 42 மாதங்கள் வரை அல்லது இரண்டு LVM3 ஏவுகலங்களை தயாரித்து விண்ணில் செலுத்தும் வரை (இதில் எது முந்தையதோ அது வரை) ISRO-விடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவைப் பெறுவார்கள்.
  • ஏவுதல் சேவைகளில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும், ககன்யான் போன்ற மேம்பட்ட திட்டங்களில் இஸ்ரோ கவனம் செலுத்தவும் 2020 ஆம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்களை இந்தியா அறிவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்