SS Innovations International, Inc நிறுவனம் ஆனது, முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப் பட்ட இடம் மாற்றக் கூடிய MantrAsana எனும் உலகின் முதல் ரோபோடிக் தொலைக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
MantrAsana என்பது ஒரு சிறிய, ஏதுவான தொலைக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை அமைப்பு ஆகும் என்பதோடுஇது அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொலைதூரத்தில் இருந்து சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்ய அனுமதிக்கிறது.
இந்த அமைப்பு நிகழ்நேர துல்லியமான செயல்பாடுகளுக்கு காந்த உணர்வி அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மற்றும் இலகுரக முப்பரிமாண கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பினை சிறிய சுகாதார மையங்களிலும் பயன்படுத்தலாம் என்பதோடுஇதனால் கிராமப்புற அல்லது சேவை வழங்கப்படாத பகுதிகளில் கூட நோயாளிகளும் நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை அணுக முடியும்.