Mappls என்பது இந்தியாவினால் உருவாக்கப்பட்ட ஒரு மேட்-இன்-இந்தியா வழி செலுத்தல் செயலியாகும் என்பதோடு தற்போது இது இந்திய அரசாங்கத்தினால் அதிகாரப் பூர்வமாக ஆதரிக்கப் படுகிறது.
இந்தச் செயலியானது, சந்திப்பு பகுதிகளின் முப்பரிமாணக் காட்சிகள், துல்லியமான வீட்டு முகவரி வழிசெலுத்தல், நேரடிப் போக்குவரத்து தகவல்கள், வேக எச்சரிக்கைகள் மற்றும் கட்டணச் சேமிப்பு கணிப்பானை வழங்குகிறது.
வானிலை மற்றும் காற்று தரக் குறியீட்டு (AQI) தரவை உள்ளடக்கிய மற்றும் இந்திய சாலைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Mappls செயலி பல இந்திய மொழிகளில் இயங்குகிறது.