December 17 , 2025
15 hrs 0 min
28
- நாசா நிறுவனமானது, MAVEN (Mars Atmosphere and Volatile EvolutioN) விண்கலத்துடனான தொடர்பை இழந்துள்ளது.
- MAVEN அதன் இயல்பான சுற்றுப்பாதையில் செவ்வாய்க் கிரகத்தின் பின்னால் சென்ற பிறகு தொடர்பு கொள்வதை நிறுத்தியது.
- இந்த விண்கலம் 2013 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டு 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகச் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
- MAVEN செவ்வாய்க் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தையும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்புகளையும் ஆய்வு செய்தது.
- இது பில்லியன் கணக்கான ஆண்டுகளில் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தின் பெரும்பகுதியை எவ்வாறு இழந்தது என்பதை விளக்க உதவியது.
- MAVEN ஆனது, கியூரியாசிட்டி மற்றும் பெர்சீவரன்ஸ் போன்ற செவ்வாய்க் கிரக உலாவிக் கலங்களுக்கான தொடர்பு நிலை மாற்றி ஆகவும் செயல்பட்டது.

Post Views:
28