இந்தியா முழுவதும் உள்ள 275 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய MERITE திட்டத்தினை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
MERITE என்பது தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டைக் குறிக்கிறது.
இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் 175 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 100 பல்தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பலன் வழங்கப்படும்.
இந்தத் திட்டமானது, 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தரம், சமத்துவம் மற்றும் நிர்வாகத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வேலைவாய்ப்பு ஆராய்ச்சி, புத்தாக்கம், எண்ணிமமயமாக்கல் மற்றும் கல்வித் தலைமைத்துவத்தில் பெண் ஆசிரியர்களுக்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபை மற்றும் தேசிய அங்கீகார வாரியம் போன்ற நிறுவனங்கள் இதன் அமல்படுத்தலுக்கான ஆதரவினை வழங்கும்.