Metop இரண்டாம் தலைமுறை நுட்பத்திலான A1 (Metop-SGA1) Metop-SGA1 செயற்கைக்கோள் ஆனது ஐரோப்பாவின் கௌரௌ எனுமிடத்தில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து Ariane-62 ஏவு கலம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இது இரண்டாம் தலைமுறை நுட்பத்திலான EUMETSAT துருவ அமைப்பின் (EPS-SG) கீழான முதல் செயற்கைக்கோள் ஆகும்.
இது புவியிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு துருவச் சுற்றுப்பாதையில் இயங்கும்.
இந்த செயற்கைக்கோள் ஆனது உயர் தெளிவுத்திறன் கொண்ட வானிலை மற்றும் வளிமண்டலத் தரவுகளை சேகரிக்க கோப்பர்நிக்கஸ் சென்டினல்-5 கலத்துடன் சேர்த்து 6 மேம்பட்ட கருவிகளைக் கொண்டுள்ளது.
மெட்டாப்-SGA1, தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால முன்னறிவிப்புகளையும், முன் எச்சரிக்கைகளையும் மேம்படுத்தும்.
இந்த செயற்கைக்கோள் பூமியை தினமும் 14 முறை சுற்றி வந்து, பருவநிலை நடவடிக்கை மற்றும் காற்றின் தரக் கண்காணிப்பை ஆதரிக்க உலகளாவியத் தகவல்களை வழங்கும்.