21 மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் என்ற திட்டத்தின் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021 ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதி பாதியிலேயே தீர்ந்து விட்டது.
அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் வரை கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப் படாது.
இதில் நிதிப் பற்றாக்குறை என்பது மாநிலங்கள் தங்களது சொந்த நிதியைப் பயன்படுத்தாத வரையில் MGNREGA தொழிலாளர்களுக்காக அளிக்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் செலவுகள் ஆகியவற்றில் ஏற்படும் தாமதமாகும்.