கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான ஊதிய விகிதங்களை உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹரியானா மாநில அரசானது, அதிகபட்சமாக 357 ரூபாயினைத் தினசரி ஊதியமாக வழங்குகிறது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த ஊதியமாக ரூ.221 வழங்குகின்றன.
கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வெறும் இரண்டு சதவீத உயர்வுடன் மிகக் குறைந்த அளவிலான ஊதிய உயர்வைப் பெற்றுள்ளன.
10.39 சதவீதம் ஊதியங்கள் அதிகரிப்புடன் ராஜஸ்தான் மாநிலமானது, ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தற்போதைய ஊதிய விகிதத்தை விட அதிகபட்சமான அளவிலான ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளது.
மற்ற ஏழு மாநிலங்கள், தற்போதைய (2022-23) ஊதிய விகிதங்களை விட 2023-24 ஆம் ஆண்டிற்கான ஊதிய விகிதங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஒரு அளவிலேயே ஊதிய உயர்வினைப் பெற்றுள்ளன.
அவை மேகாலயா (3.4 சதவீதம்), மணிப்பூர் (3.59 சதவீதம்), அருணாச்சலப் பிரதேசம் (3.7 சதவீதம்), நாகாலாந்து (3.7 சதவீதம்), அசாம் (3.93 சதவீதம்), தமிழ்நாடு (4.63 சதவீதம்), மற்றும் புதுச்சேரி (4.63 சதவீதம்) ஆகும்.