TNPSC Thervupettagam

MI-17 வானூர்தியில் பறந்த அனைத்து பெண் விமானிகள் கொண்ட குழு

May 31 , 2019 2260 days 743 0
  • இந்தியாவில் முதன்முறையாக மே 27 அன்று இந்திய விமானப் படையைச் சேர்ந்த அனைத்து பெண் விமானிகளைக் கொண்ட ஒரு குழுவினர் மித கனம் கொண்ட ஒரு ஹெலிகாப்ட்டரினை இயக்கிப் பறந்தனர் .
  • இந்த குழுவிற்கு விமானப் படை அதிகாரியான பரூல் பரத்வாஜ் என்ற பெண் தலைமை தாங்கினார். விமானப் படை அதிகாரிகளான அமன் நிதி மற்றும் ஹீனா ஜெய்ஸ்வால் ஆகியோரை இக்குழு உள்ளடக்கியது ஆகும்.
  • Mi – 17 V5 வானூர்தியில் பறந்த முதலாவது பெண் விமானி பரூல் பரத்வாஜ் ஆவார்.
  • இந்திய விமானப் படையின் முதலாவது பெண் விமானப் பொறியாளர் ஹீனா ஜெய்ஸ்வால் ஆவார்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரும் இந்திய விமானப் படையின் முதலாவது பெண் விமானி அமன் நிதி ஆவார்.
  • இந்த வானூர்தி பாதுகாப்பாக பறப்பதற்கான தகுதிச் சான்றிதழினை அளித்தவர் இந்திய விமான படைப் பிரிவில் பொறியாளராக இருக்கும் ரிச்சா அதிகாரி என்பவர் ஆவார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்