MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) ஊக்கத் தொகைகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக டிஜிட்டல் இணையதளத்தை ஒடிசா தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தை ஒடிசா டிராவல் பஜார் 2026-இல் துணை முதலமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான பிரபாதி பரிதா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் MICE நிகழ்வுகளுக்கான நிதி ஊக்கத்தொகைகளுக்கு டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க இது அனுமதிக்கிறது.
ஒடிசா சுற்றுலா (திருத்த) கொள்கை, 2026 இந்த இணையதளத்திற்கான கொள்கை கட்டமைப்பை வழங்குகிறது.
புவனேஸ்வர்-கட்டாக்-புரி-பாரதிப் பகுதி ஒரு MICE சுற்றுலா மையமாக மேம்படுத்தப் படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
MICE சுற்றுலா என்பது பெருநிறுவனக் கூட்டங்கள், ஊக்கத்தொகைப் பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை உள்ளடக்கிய வணிகச் சுற்றுலாவின் ஒரு பகுதி ஆகும்.