சண்டிகர் விமானப்படை நிலையத்தில் நடைபெற்ற அதன் ஒரு செயல்பாட்டு நீக்க விழாவின் போது MiG-21 போர் விமானங்கள் கடைசியாக வானில் பறந்தன.
MiG-21 இந்தியாவின் முதல் அதி மீயொலி வேகத்திலான போர் விமானம் மற்றும் இடைமறிப்பு விமானமாகும் என்பதோடு இது 1960 ஆம் ஆண்டுகளில் படையில் சேர்க்கப்பட்டது.
போர்த் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய விமானப்படையால் 870க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் படையில் சேர்க்கப்பட்டன.
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடனான போர்கள், 1999 கார்கில் மோதல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதல்களில் இந்த ஜெட் விமானங்கள் முக்கியப் பங்கு வகித்தன.