MIS தளம் – “எளிதில் அணுகக்கூடிய இந்தியா” என்ற பிரச்சாரம்
September 22 , 2019 2122 days 739 0
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோட் ஒரு மேலாண்மை தகவல் அமைப்பு (Management Information System-MIS) தளத்தைத் தொடங்கினார்.
இந்த MIS தளமானது மாற்றுத் திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறையினரால் அணுகக்கூடிய இந்தியா என்ற பிரச்சாரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இது அணுகக்கூடிய இந்தியா என்ற பிரச்சாரத்தின் ஒவ்வொரு இலக்குகளையும் அடைவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அனைத்து அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பற்றி
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று அணுகக்கூடிய இந்தியா என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இது சுகமியா பாரத் அபியான் என்றும் அழைக்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலகளாவிய அணுகலை அடைவதற்கான நாடு தழுவிய பிரச்சாரமாக இது தொடங்கப்பட்டது.
பள்ளிகள், மருத்துவ வசதிகள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட உட்புற மற்றும் வெளிப்புற வசதிகளில் உள்ள தடைகள்/இடையூறுகளை நீக்குவது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.