TNPSC Thervupettagam

MIS தளம் – “எளிதில் அணுகக்கூடிய இந்தியா” என்ற பிரச்சாரம்

September 22 , 2019 2061 days 710 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோட் ஒரு மேலாண்மை தகவல் அமைப்பு (Management Information System-MIS) தளத்தைத் தொடங்கினார்.
  • இந்த MIS தளமானது மாற்றுத் திறனாளிகளின் அதிகாரமளித்தல் துறையினரால் அணுகக்கூடிய இந்தியா என்ற பிரச்சாரத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது அணுகக்கூடிய இந்தியா என்ற பிரச்சாரத்தின் ஒவ்வொரு இலக்குகளையும் அடைவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அனைத்து அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பற்றி

  • சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று அணுகக்கூடிய இந்தியா என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
  • இது சுகமியா பாரத் அபியான் என்றும் அழைக்கப்படுகிறது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான உலகளாவிய அணுகலை அடைவதற்கான நாடு தழுவிய பிரச்சாரமாக இது தொடங்கப்பட்டது.
  • பள்ளிகள், மருத்துவ வசதிகள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட உட்புற மற்றும் வெளிப்புற வசதிகளில் உள்ள தடைகள்/இடையூறுகளை நீக்குவது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்