TNPSC Thervupettagam

MK காந்தியின் சேலம் வருகை

May 15 , 2026 15 hrs 0 min 37 0
  • மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் வருகை மற்றும் 1934-ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் நினைவு கூரப்பட்டது.
  • தீண்டாமை ஒழிப்புக்கான நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சேலத்திற்கு எட்டு மணி நேர வருகை தந்த காந்தி, ஹஸ்தம்பட்டியில் தங்கியிருந்தார்.
  • 1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணத்திற்கு அவர் வந்த பயணங்களில், 1920, 1923 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் சேலத்திற்கு வந்துள்ளார்.
  • தீண்டாமைக்கு எதிராக காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்ததால், 1934-ஆம் ஆண்டு வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
  • காங்கிரஸ் தலைவர்களான சி. விஜயராகவாச்சாரியார் மற்றும் பி. வரதராஜுலு நாயுடு ஆகியோரின் சொந்த ஊர் என்பதால், காந்திக்கு சேலம் தனிச்சிறப்பு மிக்கதாக இருந்தது.
  • 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிலாபத் இயக்கத்தின் போது, காந்தி, சி. ராஜ கோபாலாச்சாரி மற்றும் ஷௌகத் அலி ஆகியோர் வரதராஜுலு நாயுடுவின் இல்லத்தில் தங்கியிருந்தனர்.
  • 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், காந்தியின் தீர்மானத்தில் "சுயராஜ்யம்" என்ற கோரிக்கையைச் சேர்க்க விஜயராகவாச்சாரியாரும் மோதிலால் நேருவும் அறிவுறுத்தினர்.
  • சேலம் நகராட்சி மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, உணவகங்களில் பட்டியலிடப் பட்ட சாதியினரை அனுமதிக்க உத்தரவிட்டதுடன், விதியை மீறும் உணவகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப் படும் என்றும் எச்சரித்தது.
  • இந்த வரலாற்றுத் தொடர்புடைய ஓர் அஞ்சல் தலை அருங்காட்சியகமானது 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சேலத்தில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்