பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது, ஒரு சீரொளிக் கற்றையினால் (லேசர்) இயங்கும் Mk-II(A) ஆற்றல் ஆயுத (DEW) அமைப்பை மிகவும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அதிவேகச்’ செயல்பாடுகள், துல்லியம் மற்றும் சில நொடிகளில் இலக்கை நோக்கி மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஆகியவை அதனை மிகவும் சக்திவாய்ந்த ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பாக மாற்றியது.
ஒரு ரேடார் அல்லது அதன் உள்ளமைக்கப்பட்ட மின்னணு ஒளியிழை (EO) அமைப்பு மூலம் இலக்கு கண்டறியப்பட்டவுடன், லேசர் மூலம் இயங்கும் DEW ஒளியின் வேகத்தில் இலக்குகளை எதிர்கொண்டு, மிகச் செறிவான சீரொளிக் கற்றையைப் பயன்படுத்தி இலக்கைத் தாக்குகிறது.