TNPSC Thervupettagam
March 24 , 2026 3 days 59 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) கீழ் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த “Planet in Focus” அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்த அறிக்கை சுகாதாரம், காலநிலை நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்கிறது.
  • இந்தியா திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) அந்தஸ்தைப் பெற்றுள்ளதுடன் 97.2% பள்ளிகளில் பாலின அடிப்படையில் தனித்தனி கழிப்பறைகள் உள்ளன (SDG 6).
  • கழிவு மறுசுழற்சி வசதிகள் 829-இல் (2019-20) இருந்து 3,036 (2024-25) ஆக அதிகரித்துள்ள நிலையில் இது நீடித்த நுகர்வை மேம்படுத்துகிறது (SDG 12).
  • 784 உள்ளாட்சி அமைப்புகளில் 698 அமைப்புகள் செண்டாய் கட்டமைப்பிற்கு ஏற்ப பேரிடர் அபாயக் குறைப்பு உத்திகளைச் செயல்படுத்தியுள்ளன (SDG 13).
  • இதன்படி மீன்வள உற்பத்தி அதிகரித்துள்ளது மற்றும் ராம்சார் சதுப்புநிலப் பகுதி இரட்டிப்பாகி உள்ளது, ஆனால் காற்று மாசுபாடு, நீர்ப் பற்றாக்குறை மற்றும் கழிவு மேலாண்மை போன்ற சவால்கள் இன்னும் நீடிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்