மத்தியப் புள்ளிவிவர மற்றும் திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சகமானது (Ministry of Statistics and Programme Implementation - MoSPI) முக்கியமான சமூக - பொருளாதாரப் போக்குகள் குறித்து ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்த 5 அறிக்கைகள் பின்வருமாறு:
இந்தியாவில் குடும்பத்தின் சமூக நுகர்வு: சுகாதாரம் (2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் வரை),
இந்தியாவில் குடும்பத்தின் சமூக நுகர்வு: கல்வி (2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் வரை),
மாற்றுத் திறனாளிகள் (2018 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரை),
இந்தியாவில் குடிநீர், சுகாதாரம், உடல் நலம் மற்றும் வீடுகளின் நிலைமைகள் (2018, ஜூலை - 2018, டிசம்பர்),
தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வு (2019, ஜனவரி - மார்ச்).
முதல் இரண்டு அறிக்கைகள் தேசியப் புள்ளிவிவர அலுவலகத்தினால் (National Statistical Office - NSO) நடத்தப்பட்ட 76வது சுற்று தேசிய மாதிரி ஆய்வின் (National Sample Survey - NSS) ஒரு பகுதியாகும்.
மூன்றாவது மற்றும் நான்காவது அறிக்கைகள் 75வது சுற்று தேசிய மாதிரி ஆய்வின் ஒரு பகுதியாகும்.
NSO ஆனது இதற்கு முன்னர் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO - National Sample Survey Office) என்று அழைக்கப்பட்டது.
மேலே கூறிய அனைத்து அறிக்கைகளும் NSO அமைப்பின் பொது இயக்குநரான விஜய் குமார் என்பவரால் கையெழுத்திடப் பட்டுள்ளன.
வெளியிடப்படாத அறிக்கை
“தரவுத் தர சிக்கல்களைக்” கருத்தில் கொண்டு அகில இந்திய குடும்பத்தின் நுகர்வோர் செலவின ஆய்வின் (2017-18) முடிவுகளை வெளியிட ‘வேண்டாம்’ என்று MoSPI முடிவு செய்துள்ளது.