TNPSC Thervupettagam
May 23 , 2025 14 hrs 0 min 29 0
  • அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் அணுசக்தித் துறையின் முன்னாள் செயலாளருமான M.R. ஸ்ரீனிவாசன் சமீபத்தில் காலமானார்.
  • 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அப்சரா எனப் படும் இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையின் கட்டுமானப் பணிகளில் இவர் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றினார்.
  • 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1984 ஆம் ஆண்டில், அணுசக்தி வாரியத்தின் தலைவர் ஆகப் பொறுப்பேற்றார்.
  • 1987 ஆம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்திக் கழகத்தின் (NPCIL) நிறுவனர்-தலைவராக ஆனார்.
  • 1990 முதல் 1992 ஆம் ஆண்டு வரை வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.
  • அவருக்கு பத்மஸ்ரீ (1984), பத்ம பூஷண் (1990) மற்றும் பத்ம விபூஷண் (2015) ஆகிய விருதுகள் வழங்கப் பட்டன.
  • அவர் 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை இந்திய அரசாங்கத்தின் திட்டக் குழுவின் உறுப்பினராகப் பதவியாற்றினார்.
  • அவர் 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்