அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் அணுசக்தித் துறையின் முன்னாள் செயலாளருமான M.R. ஸ்ரீனிவாசன் சமீபத்தில் காலமானார்.
1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அப்சரா எனப் படும் இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையின் கட்டுமானப் பணிகளில் இவர் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றினார்.
1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
1984 ஆம் ஆண்டில், அணுசக்தி வாரியத்தின் தலைவர் ஆகப் பொறுப்பேற்றார்.
1987 ஆம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்திக் கழகத்தின் (NPCIL) நிறுவனர்-தலைவராக ஆனார்.
1990 முதல் 1992 ஆம் ஆண்டு வரை வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அவருக்கு பத்மஸ்ரீ (1984), பத்ம பூஷண் (1990) மற்றும் பத்ம விபூஷண் (2015) ஆகிய விருதுகள் வழங்கப் பட்டன.
அவர் 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை இந்திய அரசாங்கத்தின் திட்டக் குழுவின் உறுப்பினராகப் பதவியாற்றினார்.
அவர் 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.