நடுத்தர வரம்பு கொண்ட நிலத்திலிருந்து விண்ணில் இருக்கும் இலக்கினைத் தாக்கும் ஏவுகணை (MRSAM - medium-range surface-to-air-missile) என்ற அமைப்பானது இந்திய விமானப்படையில் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை அமைப்பானது 70 கிமீ தொலைவு வரை உள்ள வான்வழி அச்சுறுத்தல்களைத் தகர்க்கும் திறன் கொண்டது.
இந்த அமைப்பை டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலிய விண்வெளி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.
MRSAM ஏவுகணையின் கடற்படைப் பதிப்பானது ஏற்கனவே சில இந்திய போர்க் கப்பல்களில் பயன்படுத்தப் படுகிறது.