TNPSC Thervupettagam

MSME திட்டங்கள் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

January 23 , 2026 3 days 47 0
  • நிதி ஆயோக் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது என்பதோடு இது செயல்திறனை மேம்படுத்தவும் நகலெடுப்பைக் குறைக்கவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் (MSME) திட்டங்களை ஒன்றிணைப்பதை முன்மொழிகிறது.
  • இந்த அறிக்கை 18 மத்திய MSME திட்டங்களைப் பகுப்பாய்வு செய்து ஒருங்கிணைந்த டிஜிட்டல் அணுகல், தொகுப்பு மேம்பாடு, திறன் திட்ட சீரமைப்பு மற்றும் சந்தைப் படுத்தல் ஆதரவு ஒருங்கிணைப்பை பரிந்துரைத்தது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) MSME நிறுவனங்கள் சுமார் 29–30% பங்களிக்கின்றன மற்றும் சுமார் 28.7 கோடிக்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்துகின்றன.
  • நாடு முழுவதும், பாதி கிராமப்புறங்களில் உள்ளதுடன் 6.3 கோடிக்கும் அதிகமான அலகுகள் உள்ளன என்பதோடு இவை இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 45–46% ஆனது MSME நிறுவனங்களிலிருந்து வருகின்றன.
  • மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட வலை தளம், இணைக்கப் பட்ட தொகுப்புத் திட்டங்கள், திறன் திட்டப் பகுத்தறிவு மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் புதுமை ஆதரவு அமைப்பு ஆகியவை இதன் முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.
  • MSME நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோருக்குத் திட்ட விநியோகத்தை எளிமையாகவும், வேகமாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதே இதன் குறிக்கோள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்