TNPSC Thervupettagam
January 14 , 2026 15 hrs 0 min 18 0
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் 2026 ஆம் ஆண்டு அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பிற்கு MSTrIPES (புலிகளுக்கான கண்காணிப்பு அமைப்பு: தீவிரப் பாதுகாப்பு மற்றும் சூழலியல்) செயலி பயன்படுத்தப்படுகிறது.
  • வன ஊழியர்கள் கைமுறையாக பதிவு செய்வதற்கு பதிலாக GPS மூலம் இயக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி நிகழ்நேரத் தரவை உள்ளிடுவார்கள்.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 08 முதல் 14 ஆம் தேதி வரை புலிகள், இரை விலங்குகள், தாவரங்கள் மற்றும் இருப்பிட தூரம் ஆகியவை இந்த கணக்கெடுப்பில் உள்ளடக்கப் படும்.
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 1,108 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
  • அகில இந்திய புலிகள் மதிப்பீடு ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்