இரயில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று இந்திய இரயில்வே நிர்வாகமானது, பிரத்தியேக சரக்கு வழித்தடக் கழகத்துடன் (DFCCIL) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றைப் பயன்படுத்தி இயந்திர வழிக் கண்காணிப்பு அடிப்படையிலான ஆய்வு அமைப்புகளை (MVIS) நிறுவுவதற்கானதாகும்.
MVIS ஆனது, இரயிலின் சுழல் இயக்கியின் உயர் தெளிவுத்திறன் படங்களைப் படம் பிடித்து, தொங்குகின்ற, தளர்வான அல்லது தவறிய பாகங்களை தானாகவே நன்கு கண்டறிகிறது.
MVIS ஆனது செயல்பாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், கைமுறை ஆய்வுகளைக் குறைத்தல் மற்றும் விபத்துகள் மற்றும் சேவை இடையூறுகளைத் தடுப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.