இராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற 50 MY Bharat–நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) 2022–23 விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட NSS அமைப்பில், தற்போது நாடு முழுவதும் சமூக, சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சிறந்த சேவைக்காக விருது வழங்கப்பட்ட 30 இளம் தன்னார்வலர்களில் பிரியானஸ் ஹசாரிகா (அசாம்), ஆயுஷி சின்ஹா (மத்தியப் பிரதேசம்), P. தினேஷ் (புதுச்சேரி), மற்றும் அங்கூர் குமார் மிஸ்ரா (உத்தரப் பிரதேசம்) ஆகியோர் அடங்குவர்.