TNPSC Thervupettagam
July 22 , 2025 5 days 111 0
  • தமிழ்நாடு வனத்துறையானது உலக பாம்பு தினத்தன்று (ஜூலை 16) கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் NAAGAM என்ற அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.
  • இந்த நிகழ்வில், 'தமிழ்நாட்டில் பொதுவாகக் காணப்படும் பாம்புகள்' என்ற சிறு புத்தக வெளியீடு மற்றும் கட்டமைக்கப்பட்ட பாம்பு மீட்புப் பயிற்சித் திட்டம் ஆகியவை இடம் பெற்றன.
  • இந்த நிகழ்வில் பாம்பு மீட்பு மற்றும் வளங்காப்பில் ஆற்றியப் பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சத்தியன் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்தச் செயலியானது குடிமக்கள், பாம்புகள் வீடுகளில் நுழைவது குறித்து புகார்கள் அளிக்கவும், பயிற்சி பெற்ற பாம்பு மீட்பு வீரர்கள் விரைவாகவும், நெறிமுறையுடனும் நடவடிக்கை எடுக்க உதவும்.
  • தமிழ்நாடு மாநிலத்தில் 142 பாம்பு இனங்கள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்