NABARD வங்கியின் மாநில நிதிப்புழக்கத் திறன் பகுப்பாய்வு அறிக்கை 2025-26
February 7 , 2025 250 days 284 0
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) மாநில நிதிப் புழக்க (கடன்) திறன் பகுப்பாய்வு அறிக்கை 2025-26 ஆனது, தமிழ்நாடு மாநில நிதிக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
NABARD வங்கியானது 2025-26 ஆம் ஆண்டிற்காக மாவட்ட வாரியாக மிக சாத்தியமான இணைக்கப்பட்ட கடன் திட்டங்களைத் தயாரித்து, தொகுத்து, மாநில நிதிப் புழக்கத் திறன் பகுப்பாய்வு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கடந்தப் பத்தாண்டுகளில் சுமார் 11 முதல் 12 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு தொடர்ந்து மிக வலுவான மீள்தன்மையை வெளிப்படுத்தி வருகிறது.
2025-26 ஆம் ஆண்டிற்கு, வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளுக்காக சுமார் 4,34,583 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், முன்னுரிமைத் துறைக்கான கடன் வழங்கீட்டுத் திறன் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் ஆகிய இருக்கும் என்று NABARD கணித்துள்ளது.