NABARD மற்றும் NABFOUNDATION அமைப்பின் புதிய முன்னெடுப்பு
September 3 , 2021 1474 days 668 0
திரிபுராவில் NABARD மற்றும் NABFOUNDATIONஅமைப்பினால் தொடங்கப்பட்ட ‘My Pad, My Right’ என்ற திட்டத்தினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இது கோமதி மாவட்டத்திலுள்ள கில்லா என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மானியம், ஊதிய உதவி மற்றும் மூலதன உபகரணம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் கிராமப்புற பெண்களிடம் வாழ்வாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் திரிபுரா மாநிலக் கூட்டுறவு வங்கியின் நடமாடும் ATM வாகனத்தினையும் மத்திய அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.