அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற 18வது அணிசேரா இயக்கத்தின் (Non-Aligned Movement - NAM) உச்சி மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தினார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளத் தவறிவிட்டார்.
முன்னதாக வெனிசுலாவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு சந்திப்பையும் அவர் தவற விட்டார்.
1961 ஆம் ஆண்டு முதல், இந்தியப் பிரதமர் எப்போதும் NAM உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
விதிவிலக்கு: 1979 ஆம் ஆண்டில், சௌத்ரி சரண் சிங் தற்காலிகப் பிரதமராக இருந்த போது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தவற விட்டார்.
மோடியின் வராமையானது 60 வயதான இந்த அமைப்பில் கடந்த கால நடைமுறையிலிருந்து ஒரு தீர்க்கமான விலகலைக் குறிக்கிறது.
XVIIIவது NAM உச்சி மாநாட்டின் கருப்பொருள் "சமகால உலகின் சவால்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் போதுமான பதிலை உறுதி செய்வதற்காக பாண்டுங் கோட்பாடுகளை நிலை நிறுத்துதல்" என்பதாகும்.
பாண்டுங் கோட்பாடுகள்
பாண்டுங்கின் பத்து கோட்பாடுகள் உலக அமைதி மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை உள்ளடக்கிய ஒரு அரசியல் அறிக்கையாகும்.
அவை 1955 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்க மாநாட்டில் வகுக்கப் பட்டன.
NAM பற்றி
அணிசேரா இயக்கத்தின் (NAM) நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒரு நாடாகும்.
NAM அமைப்பானது 1961 ஆம் ஆண்டில் 29 உறுப்பினர்களுடன் நிறுவப் பட்டது.
தற்போது இது 120 உறுப்பினர்களாக வளர்ந்து தேசிய-நாடுகளின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றாக விளங்குகிறது.