தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் குறியீட்டு (NARI) அறிக்கையானது, 31 நகரங்களில் 12,770 பெண்களை ஆய்வு செய்து, தேசியப் பாதுகாப்பு மதிப்பெண்ணை 65 சதவீதமாக குறிப்பிட்டுள்ளது.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஐஸ்வால், காங்டாக், இட்டாநகர் மற்றும் மும்பை ஆகியவை பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக தரவரிசைப் படுத்தப் பட்டன.
பாட்னா, ஜெய்ப்பூர், ஃபரிதாபாத், டெல்லி, கொல்கத்தா, ஸ்ரீநகர் மற்றும் ராஞ்சி ஆகியவை மிகக் குறைந்த பாதுகாப்பான நகரங்களாக அடையாளம் காணப்பட்டன.
கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 40 சதவீதத்தினர் தங்களது நகரத்தில் 'அவ்வளவு பாதுகாப்பாக இல்லை' அல்லது 'பாதுகாப்பற்றதாக' உணர்கிறார்கள் என்று குறிப்பிட்டனர்.
86 சதவீதப் பெண்கள் பகல் நேரங்களில் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
91 சதவீத பெண்கள் தங்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக உணர்ந்தனர், ஆனால் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் POSH (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு) கொள்கை அமலாக்கம் குறித்து உறுதியாக தெரிந்திருக்கவில்லை.
2024 ஆம் ஆண்டில், பொது இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக 7 சதவீதப் பெண்கள் தெரிவித்தனர் என்ற நிலையில் இது 24 வயதிற்குட்பட்ட பெண்களிடையே 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
துன்புறுத்தலை எதிர்கொண்ட மூன்று பெண்களில் ஒருவர் மட்டுமே அது குறித்து புகார் அளித்துள்ளனர்.