TNPSC Thervupettagam

NARIT செயற்கை நுண்ணறிவுக் கருவி

May 3 , 2026 14 hrs 0 min 31 0
  • போதைப்பொருள் விசாரணைக்காக இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட 'நாரிட் AI' என்ற கருவியை குஜராத் காவல்துறை உருவாக்கியுள்ளது.
  • NARIT AI ஆனது (போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்க அடிப்படையிலான விசாரணை கருவி) போதைப்பொருள் தொடர்பான வழக்குகளைக் கையாளுவதில் காவல்துறைக்கு உதவுகிறது.
  • இது முதல் தகவல் அறிக்கையை (FIR) பகுப்பாய்வு செய்து, விரிவான விசாரணை அறிக்கைகளை உருவாக்குகிறது.
  • இது RAG (மீட்பு மேம்படுத்தப்பட்ட உருவாக்கம்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதோடு மேலும் இது NDPS சட்டம் (போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம், 1985) போன்ற சட்டங்களைப் பயன்படுத்துகிறது.
  • இது ஆதாரங்களுக்கான சரி பார்ப்புப் பட்டியல்கள், சட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குவதோடு, நீதிமன்றத்தில் சாத்தியமான எதிர் வாதங்களையும் கணிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்