இந்திய அரசாங்கம் ஆனது தேசியப் புலனாய்வுக் கட்டமைப்பினை (NATGRID) தேசிய மக்கள்தொகை பதிவேடுடன் (NPR) ஒருங்கிணைத்துள்ளது.
இந்த ஒருங்கிணைப்பானது, சரிபார்க்கப்பட்ட மக்கள்தொகை மற்றும் குடும்பத்துடன் தொடர்புடைய தரவுகளுக்கான நிகழ்நேர அணுகலை அனுமதிக்கிறது.
26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு (2008 ஆம் ஆண்டு) உளவுத்துறை ஒருங்கிணைப்பை மேம்படுத்த NATGRID உருவாக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற இது 20க்கும் மேற்பட்ட வகை குடிமையியல் மற்றும் வணிகத் தரவுத் தளங்களை ஒருங்கிணைக்கிறது.
NATGRID அமைப்பின் பகுப்பாய்வுக் கருவியான காண்டிவா, முக அங்கீகாரத்தை மேற் கொள்கிறது என்ற நிலையில்இது மேலும் சந்தேகத்திற்குறிய நபர்களை அடையாளம் காண வேறுபட்ட தரவுப் புள்ளிகளை ஒருங்கிணைக்கிறது.
இந்த ஒருங்கிணைப்பு என்பது தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளை மேம்படுத்துவதோடு, இந்தியா முழுவதும் குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துகிறது.