இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் முதன்மையான எண்ணெய்க் கசிவு தணிப்பு நடவடிக்கை பயிற்சியான NATPOLREX-X 2025 ஆனது கடல் சார் மாசு தொடர்பான அவசரநிலைகளை உருவகப்படுத்தி சென்னை கடற்கரையில் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியானது, 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல அரசு நிறுவனங்கள், துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் மூலம் தேசிய தயார்நிலையை பரிசோதிக்கிறது.
இது பிரத்தியேக கப்பல்கள், விமானம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பட்டப் கட்டுப்பாடு, பரவல் மற்றும் மீட்பு நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது.
NATPOLREX-X ஆனது நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, அவசரகாலத் திட்டங்களையும் செம்மைப்படுத்துவதோடு இது MARPOL 73/78 உடன்படிக்கையின் கீழான உலகளாவியக் கடல்சார் சுற்றுச்சூழல் தர நிலைகளுடன் ஒத்துப் போகிறது.