கனரகத் தொழில்துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் என்ற துறைக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள NATRAX (தேசிய வாகன சோதனைத் தடங்கள் – National Automotive Test Tracks) எனும் அதிவேக தடத்தினைத் தொடங்கி வைத்தார்.
இது ஆசியாவின் மிக நீளமான அதிவேக தடமாகும்.
இது உலகின் 5வது மிக நீளமான அதிவேக தடமாகும்.
இதன் நீளம் 11.3 கி.மீ. ஆகும்.
இது இருசக்கர வாகனம் முதல் கனரக இழுபொறி இயந்திர இணைப்பு ஊர்தி வரையிலான அனைத்து உலக அதிவேக வாகனங்களின் சோதனைக்குமான ஒரே தீர்வாக அமையும்.