கடற்படைகளின் ஆயுத அமைப்புகள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின் 4வது பதிப்பான “NAVARMS – 19” புது தில்லியில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் (Institute for Defence Studies and Analysis - IDSA) உள்ள மேம்பாட்டுப் பகுதியில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுப் பதிப்பிற்கான கருத்துரு, “இந்தியாவில் தயாரிப்போம் - போர் வகை: வாய்ப்புகள் மற்றும் கட்டாயங்கள்” என்பதாகும்.
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry - CII) இணைந்து இந்தியக் கடற்படையானது 2007 ஆம் ஆண்டு முதல் 'NAVARMS' என்ற கண்காட்சியை நடத்தி வருகின்றது.
கடற்படை ஆயுத அமைப்புகள் குறித்து இந்தியாவில் நடத்தப்படும் ஒரே சர்வதேசக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி NAVARMS ஆகும்.