TNPSC Thervupettagam

NavIC அணு கடிகாரச் செயலிழப்பு – இஸ்ரோ

March 25 , 2026 2 days 56 0
  • IRNSS-1F செயற்கைக்கோளில் உள்ள அணுக் கடிகாரம் செயலிழந்த நிலையில், இது இந்தியாவின் NavIC (இந்திய செயற்கைக் கோள் தொகுப்பைக் கொண்டு வழிகாணல்) வழி செலுத்தல் அமைப்பைப் பாதித்துள்ளது.
  • துல்லியமான இருப்பிடம், வழிசெலுத்தல் மற்றும் நேர சேவைகளுக்கு இந்த அணுக் கடிகாரங்கள் அவசியமானவை.
  • இந்தச் செயலிழப்பால், NavIC-க்கான செயல்பாட்டுச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது (தேவையான எண்ணிக்கை நான்கு).
  • NavIC என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு பிராந்திய வழிசெலுத்தல் அமைப்பு ஆகும்.
  • இந்த அமைப்பை வலுப்படுத்த, வருங்கால மாற்றீட்டு செயற்கைக்கோள்களில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருபிடியம் அணு கடிகாரங்களைப் பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்