NavIC அமைப்பு அடிப்படையிலான இந்தியாவின் முதல் PNT சாதனம்
July 9 , 2023 776 days 427 0
எலினா ஜியோ சிஸ்டம்ஸ் எனப்படும் பெங்களூருவில் உள்ள ஒரு விண்வெளி தொழில் நுட்ப நிறுவனமானது, இந்தியப் பிராந்திய வழிகாட்டுதல் அமைப்பின் அடிப்படையில் அமைந்த இந்தியாவின் முதல் PNT சாதனத்தை அறிமுகப் படுத்துகிறது.
PNT சாதனங்கள் என்பது நிலைப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் நேரத்தினை மாற்றச் செய்யும் சாதனங்களைக் குறிக்கிறது.
PNT சாதனத்தினை OTG இணைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி, திறன் பேசியுடன் எளிதாக இணைக்க முடியும்.
இரயில்வே நிர்வாகம், நில அளவீடு, தொலைத்தொடர்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு ஆகியவற்றிற்கான துல்லியமான வழிகாட்டுதலை வழங்குவதை இந்த சாதனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.