மத்திய அரசானது, உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் NAVYA (இளைய வளரிளம் பருவப் பெண்களுக்கான தொழில் பயிற்சி மூலம் ஊக்கத்தைத் தூண்டுவது) என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு பயின்ற 16 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய தொழில் முறை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக என்று மரபுசாரா வேலை வாய்ப்புகளில் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
NAVYA திட்டம் ஆனது, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டினை ஊக்குவிப்பதன் மூலம் விக்ஸித் பாரத்@2047 திட்டத்தின் தொலைநோக்கு திட்டமிடலை ஆதரிக்கிறது.
இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (MWCD) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) ஆகியவற்றின் ஒரு கூட்டு சோதனை முன்னெடுப்பாகும்.
இந்தத் திட்டமானது வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சில இலட்சிய நோக்கமுள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் உட்பட 19 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களை உள்ளடக்கும்.