TNPSC Thervupettagam
June 27 , 2025 5 days 53 0
  • மத்திய அரசானது, உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் NAVYA (இளைய வளரிளம் பருவப் பெண்களுக்கான தொழில் பயிற்சி மூலம் ஊக்கத்தைத் தூண்டுவது) என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு பயின்ற 16 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய தொழில் முறை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக என்று மரபுசாரா வேலை வாய்ப்புகளில் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
  • NAVYA திட்டம் ஆனது, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டினை ஊக்குவிப்பதன் மூலம் விக்ஸித் பாரத்@2047 திட்டத்தின் தொலைநோக்கு திட்டமிடலை ஆதரிக்கிறது.
  • இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (MWCD) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) ஆகியவற்றின் ஒரு கூட்டு சோதனை முன்னெடுப்பாகும்.
  • இந்தத் திட்டமானது வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சில இலட்சிய நோக்கமுள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் உட்பட 19 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களை உள்ளடக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்