வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFCs) அளவு சார் ஒழுங்குமுறை (SBR) கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
NBFC வங்கியை அவற்றின் அளவு, ஆபத்து மற்றும் முறைசார் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதற்காக SBR கட்டமைப்பு 2022 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
SBR கட்டமைப்பின் கீழ், NBFC வங்கிகள் அடிப்படை அடுக்கு, நடுத்தர அடுக்கு, மேல் அடுக்கு மற்றும் உயர் அடுக்கு என வகைப்படுத்தப்படுகின்றன.
இந்த மதிப்பாய்வு அதிகரித்து வரும் முறை சார் அபாயங்கள் மற்றும் வங்கிகள் மற்றும் NBFC வங்கிகளுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்புகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
NBFC கடன் தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 15% ஆகும்.
இந்த மதிப்பாய்வு ஆனது NBFC வங்கிகளின் நிதி நிலைத்தன்மை மற்றும் பயனுள்ள மேற்பார்வையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.