TNPSC Thervupettagam

NCDC திட்டத்திற்கு உதவி மானியம்

August 5 , 2025 17 days 78 0
  • உதவி மானியம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு (NCDC) சுமார் 2,000 கோடி ரூபாய் மானியத்தை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
  • கூட்டுறவு நிறுவனங்களுக்கான கடன்களுக்கு நிதியளிக்க வெளி/திறந்தச் சந்தையில் இருந்து 20,000 கோடி ரூபாய் நிதி திரட்ட NCDC இந்த மானியத்தைப் பயன்படுத்தும்.
  • இந்தத் திட்டமானது கிராமப்புற வருமானத்தை அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் கூட்டுறவுத் துறையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.
  • கடன் அணுகலை மிக நன்கு மேம்படுத்துவதன் மூலமும், கூட்டுறவு நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதன் மூலமும், விளிம்புநிலைச் சமூகங்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் 29 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட 8.25 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்