NCG விஸ்வாம் புற்றுநோய் பராமரிப்பு இணைப்புத் திட்டம்
September 21 , 2019 2063 days 669 0
சர்வதேச அணுசக்தி அமைப்பின் 63வது பொதுக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக NCG விஸ்வாம் புற்றுநோய் பராமரிப்பு இணைப்புத் திட்டமானது (NCG Vishwam Cancer Care Connect - NCG - Vishwam 3C) இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கே.என் வியாஸ் என்பவரால் வியன்னாவில் தொடங்கப்பட்டது.
NCG - Vishwam 3C ஆனது இந்தியாவின் தேசியப் புற்றுநோய் தொடருடன் பங்காளர் நாடுகளிலிருந்து மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி
NCG ஆனது 2012 ஆம் ஆண்டில் டாடா நினைவு அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது இந்திய அரசாங்கத்தின் அணுசக்தித் துறையால் (DAE - Department of Atomic Energy) நிதியளிக்கப்படுகின்றது.
இது புற்றுநோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அவற்றிற்கு சிகிச்சையளிப்பதற்கான நோயாளிப் பராமரிப்பின் சீரான தரங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.