பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (NCLAT - National Company Law Appellate Tribunal) நிர்வாகத் தலைவராக நீதிபதி (ஓய்வு) பன்சி லால் பட் என்பவரின் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது.
நீதிபதி பன்சி லால் பட், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முதல் தலைவரான நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாவிற்குப் பின்னர் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம், 2013 என்ற சட்டத்தால் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் நிறுவப் பட்டது.
இது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான முறையீடுகளை விசாரிக்கிறது.
மேலும் இது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (National Company Law Tribunal), திவால் மற்றும் நொடித்தல் நிலை வாரியம் மற்றும் இந்தியப் போட்டி ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான ஒரு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் ஆகும்.