மத்திய அரசானது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அசோக் பூசன் அவர்களை தேசிய நிறுவனச் சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
இந்தத் தீர்ப்பாயமானது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 410 ஆவது பிரிவின் கீழ் அரசினால் உருவாக்கப் பட்டது.