NCMM திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்
August 6 , 2025 16 days 38 0
சுரங்க அமைச்சகமானது (MoM) தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் (NCMM) கீழ் ஏழு நிறுவனங்களைச் சிறப்பு மையங்களாக (CoE) அங்கீகரித்துள்ளது.
இந்தச் சிறப்பு மையங்களில் (CoE) நான்கு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் மூன்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) ஆய்வகங்கள் அடங்கும்.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ஐதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இந்திய சுரங்கப் பள்ளி தன்பாத், ரூர்க்கேயின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், CSIR - IMMT புவனேஸ்வர், CSIR NML ஜாம்ஷெட்பூர் மற்றும் NFTDC ஐதராபாத் ஆகியன அங்கீகரிக்கப் பட்ட நிறுவனங்கள் ஆகும்.
இந்த CoE மையங்கள், தூய்மையான ஆற்றல், இயக்கம்/போக்குவரத்து மாற்றம், மின்னணுவியல், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளுக்கு மிகவும் அவசியமான முக்கியமான கனிமங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த என புதுமையான மற்றும் மாற்றத்தக்க ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.