விக்சித் பாரத் தொலைநோக்குப் பார்வைக்கு இணையாக இந்தியாவின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, இந்தியாவும் உலக வங்கி குழுமமும் 2026–2031 ஆம் ஆண்டுக்கான புதிய நாடு கூட்டாண்மை கட்டமைப்பை (NCPF) அறிவித்துள்ளன.
இந்தக் கட்டமைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 8–10 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குகிறது.
இது உள்கட்டமைப்பு, எரிசக்தி, வேளாண் வணிகம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கிராமப்புறச் செழிப்பை வலுப்படுத்துதல், நகர்ப்புற மேம்பாடு மற்றும் காலநிலை மீள்திறனை மேம்படுத்துவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மை தனியார் துறை தலைமையிலான வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது.