TNPSC Thervupettagam
November 3 , 2025 18 days 88 0
  • UNFCCC (பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கை) அமைப்பினால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான NDC (தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள்) தொகுப்பு அறிக்கையானது, பெலெமில் நடைபெற உள்ள COP30 மாநாட்டிற்கு முன்னதாகவே பருவநிலை சார் நடவடிக்கைகளை மதிப்பிடுகிறது.
  • கூட்டு உலகளாவிய உமிழ்வுகள் குறைந்து வந்தாலும், வெப்பமயமாதலை 1.5°C வரம்பிற்குள் கட்டுப்படுத்துவதற்கான பாரிசு உடன்படிக்கையின் இலக்கை அடைவதற்கான வேகம் போதுமானதாக இல்லை.
  • உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 30% பங்கினைக் கொண்ட 64 நாடுகளின் புதிய NDCகள், 2035 ஆம் ஆண்டிற்குள் 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 17% வரை உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • 10 நாடுகளுள் 9 நாடுகள் தற்போது பொருளாதார அளவிலான உமிழ்வு இலக்குகளைக் கொண்டுள்ளன என்பதோடு மேலும் 97% நாடுகள் பருவநிலைச் செயல்படுத்தலை ஆதரிக்கும் தேசிய சட்டம் அல்லது கொள்கை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.
  • தகவமைப்பு நடவடிக்கைகள் 73% NDCகளில் சேர்க்கப்பட்டுள்ளன அதே நேரத்தில் 94% NDCகள் பருவநிலைத் தாக்கங்களிலிருந்து ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தை நிவர்த்தி செய்வதற்கான குறிப்பு நடவடிக்கைகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்